பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய சிகிச்சை

10 Jul, 2026 | 03:17 PM
image

பிறந்த பச்சிளங் குழந்தைகள் தாய்ப்பாலை பருகும் போது திடீரென்று வாந்தி எடுக்கக்கூடும். இது தொடர்ந்தால்.. பிள்ளைகளுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். இதற்கு வைத்தியர்கள் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, நவீன சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.

பிறந்து மூன்று வாரங்கள் முதல் ஆறு வாரங்களுக்குள் அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டிய பிறகு வாந்தி எடுப்பது, தொடர்ச்சியாக பசி ஏற்படுவது, பிள்ளை பசியால் அழுவது, வயிற்றுப் பகுதியில் சுருக்கங்கள் இருப்பது, நீர் சத்து குறைபாடு, வெளியேற்றும் மலத்தில் ஏற்படும் நிற மாற்றங்கள், எடை குறைவு.. என பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவர்களுடைய வயிற்றில் பைலோரிக்ஸ்டெனோசிஸ் எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.

சிறு குடலுக்கும், வயிற்றுக்கும் இடையேயான தசை திசு இயல்பான அளவை விட சுருக்கம் அடைந்தாலோ அல்லது முழுமையான வளர்ச்சியை அடையாமலோ அல்லது அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ உணவு வயிற்றில் தேக்கமடையக்கூடும். இவை வாந்தியாக  வெளியேறும்.

பொதுவாக எம்முடைய உணவு குழாய் பகுதி உணவை வயிற்றுக்குள் செல்வதற்கு ஒரு வால்வு அமையப்பெற்றிருக்கிறது. இந்த தசையை பைலோரஸ் என குறிப்பிடுகிறார்கள். இதன் சுருங்கி விரியும் தன்மை அல்லது திறந்து மூடும் நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் .. இத்தகைய நோய்க்குறி ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் கடுமையான வாந்தி, நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் விவரிக்க இயலாத நாட்பட்ட பாதிப்பும் உண்டாகக்கூடும்.

மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்தால்.. எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட், குருதி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனையின் அடிப்படையில் பாதிப்பின் வீரியம் மற்றும் தன்மையை துல்லியமாக அவதானித்து மருந்தியல் சிகிச்சை வழியாகவும் அல்லது பைலோரோமயோட்டமி எனும் சத்திர சிகிச்சை மூலமாக முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

வைத்தியர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெனிட்டோயூரினரி டியூபர்குளோசிஸ் எனும் சிறுநீரகத்தில் ஏற்படும்...

2026-08-18 16:54:32
news-image

கேஸ் கீஸர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய...

2026-08-17 15:34:34
news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41