லட்சுமி காந்தன் கொலை வழக்கு - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : 2 எம் சினிமாஸ் & டி பிக்சர்ஸ்
நடிகர்கள் : வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிசி அண்டனி, 'அருவி' மதன், கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி மற்றும் பலர்.
இயக்கம் : தயாள் பத்மநாபன்
மதிப்பீடு : 2 / 5
'கொன்றால் பாவம்', 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' ஆகிய கவனம் ஈர்த்த படைப்புகளை வழங்கிய இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ... லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்ற படத்தின் தலைப்பு ... ஆகியவை கவனம் ஈர்க்க.. பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.
2012 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது. நீதிமன்றம் ஒன்றில் கனக சபை என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேல்முருகன் என்பவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சட்டத்தரணி வாதிடுகிறார். குற்றம் சாட்டப்பட்ட வேல் முருகனும், கொலை குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதால்.. அவருக்கு தண்டனை உறுதியாகிறது. இந்தத் தருணத்தில் நீதியரசர் - 1972 ஆம் ஆண்டில் கடலூர் சிறையில் கொலை குற்ற வழக்கிற்காக தூக்கிலிடப்பட்ட மரண தண்டனை கைதி அறிவுமதியின் சுயசரிதையை வாசிக்கிறார். அந்த சுயசரிதையில் தூக்கு தண்டனை கைதி அறிவுமதி என்ன எழுதி இருக்கிறார்? என்பதனை காட்சி மொழியாக விரிவதும்.. இந்த சுயசரிதையை வாசித்து முடித்த பிறகு.. நீதி அரசர் குற்றவாளி வேல் முருகனுக்கு மரண தண்டனையை வழங்கினாரா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
நான்லீனியர் பாணியில் கதை சொல்லப்பட்டிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். ஆனால் மரண தண்டனை விதிப்பது குறித்து சமூகத்தில் ஆரோக்கியமான விவாதம் எழ வேண்டும் என்பதற்காக இவர் வைத்திருக்கும் வாதமும், காட்சிகளும் அழுத்தமானதாக இல்லை என்பதுதான் சோகம்.
தூக்கு தண்டனை வழங்குவதற்கு முன் குற்றவாளி அத்தகைய குற்றம் செய்ததன் உளவியல் பலவீனத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை முன் வைத்திருப்பதை வரவேற்றாலும்... அதனை யார் ?எந்த சூழலில் ?வலியுறுத்துகிறார்கள் என்பதிலும் இயக்குநர் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தேர்தல் அரசியலில் ஜனநாயகம் தழைத்தோங்க சீர்திருத்தம் வேண்டும் என வலியுறுத்துவதில் தேர்தல் அரசியலில் பங்கு பற்றி அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு உண்டு.
1972 ஆம் ஆண்டு கால கட்டத்திய வட தமிழகத்தின் துறைமுக நகரான கடலூர் பகுதி மக்களின் வாழ்வியலை இயல்பாக விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. இதற்காக உழைத்த கலை இயக்குநருக்கும் , ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுகள்.
அறிவுமதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். ஆனால் பல இடங்களில் அந்த கதாபாத்திரத்திற்குரிய உடல் மொழியை பின்பற்றுவதில் தடுமாறுகிறார்.
அறிவுமதி கதாபாத்திரத்தின் வாழ்க்கையை திசைமாற்றும் நபராக நடித்திருக்கும் நடிகர் மாறனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
ஆசிரியராக நடித்திருக்கும் சரவணனின் கதாபாத்திரத்தின் மூலம் ஏதாவது திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்த்தால்.. அவை மிஸ்ஸிங்.
பாரதிதாசனின் 'முத்தம் ஒன்னு தாடா..' பாடலில் இசையமைப்பாளர் தர்புகா சிவா - சிறந்த இசை கலைஞர் என்பது மீண்டும் நிரூபித்திருக்கிறார் .
சிறை துறை காவல் அதிகாரியாக நடித்திருக்கும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் திரை தோற்றமும் ரசிக்க முடிகிறது.
மரண தண்டனை சரியா? தவறா? என்ற விவாதத்தில் பங்கு பற்றுவதற்கு முன்... இத்தகைய தண்டனை சமூகத்தில் குற்றங்கள் உருவாவதை உளவியல் ரீதியாக தடுக்கிறதா? இல்லையா? என்பதனையும் இயக்குநர் ஒரு முறை யோசித்திருக்கலாம்.
லட்சுமி காந்தன் கொலை வழக்கு- ஈனஸ்வரம்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM