தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ஆர். ராஜமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அர்ஜுனன் பெயர் பத்து' திரைப்படத்தில் யோகி பாபு , அனாமிகா மகி, காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, 'மைனா' நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். சரக்கு வாகன திருட்டு பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேவ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் டி. தங்கப்பாண்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன்- நித்திலன் சுவாமிநாதன்- ஷான்- ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' திரைத்துறையில் பணியாற்றி போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இதிலிருந்து விலகி சாலை போக்குவரத்து சரக்கு வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். மூன்றாண்டுகளுக்கு முன் எம்முடைய தொடக்க கால திரைத்துறை நண்பரும், உச்ச நடிகரான யோகி பாபு எம்மைத் தொடர்பு கொண்டு படத்தை இயக்கலாம் வா என அழைப்பு விடுத்தார். அதன் பிறகு இந்தக் கதையை அவரிடம் சொன்னேன். அவர் நன்றாக இருக்கிறது வா சேர்ந்து பணியாற்றலாம் என்றார். சாலைகளில் இயங்கும் சரக்கு போக்குவரத்திற்கான வாகனம் தொலைந்து போனால்... அதன் பின்னணியில் உள்ள குற்ற உலகத்தைப் பற்றி விவரித்திருக்கிறேன். இந்த கதையை யோகி பாபு , சமுத்திரக்கனி, காளி வெங்கட், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் ஆகியோரிடமும் சொல்லி இருக்கிறேன். இவர்களிடம் கதையை சொன்ன போது அவர்களும் புதிதாக நான்கு சக்கர வாகனத்தை வாங்கி ஏமாந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். வாகனத்தை வாங்குவதற்காக உத்திரவாதம் கொடுத்தவர்களும்.. வங்கிகளில் கடன் வாங்கியவர்களும்.. வாகன திருட்டிற்கு பிறகு எதிர்கொள்ளும் சங்கடங்களையும், நெருக்கடிகளையும் இப்படத்தில் பேசி இருக்கிறோம். இது படத்தை பார்க்கும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொண்டு வெற்றி பெற வைக்கும் என நம்புகிறேன்'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM