ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

10 Jul, 2026 | 02:30 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒரு நாடாக இன்று நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். நேரடி ஏகாதிபத்தியவாதிகளைத் தோற்கடித்து சுதந்திரம் பெற்றது போல் இன்று நடைமுறையில் உள்ள மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும். பல்வேறு நாடுகளின் அமைப்புகளுக்கு அல்லது நிறுவனங்களுக்கு இரையாவதற்கு இடமளிக்காது இவற்றைத் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மையைக் சீர்குலைக்கும் பல்வேறு முயற்சிகளைத் தோற்கடித்து, ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் பாதுகாத்து, புவிசார் அரசியல் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

 வியாழக்கிழமை (09) அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா தேசிய மகோற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மகா சங்கத்தினருக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களையும் வேறுபாடுகளை மறந்து தோற்கடிக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மேலும், நாம் இன்று தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்த ஒரு யுகத்தில் வாழ்ந்த போதிலும், மனிதனின் மனதில் உள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறைகள் வளர்ச்சியடைந்திருந்தாலும் மனிதர்களின் மனம் வளர்ச்சியடையவில்லை.

வரலாற்றின் கடினமான காலங்களில் நாட்டைக் காத்து, பலப்படுத்தி, கல்வி மற்றும் மதத்தைப் பாதுகாக்கும் விலைமதிப்பற்ற சேவையை மகா சங்கத்தினரே செய்துள்ளனர்.

மகா சங்கத்தினருக்கு மதிப்பளிப்பது என்பது ஒட்டுமொத்த நாகரிகத்திற்கும் மதிப்பளிப்பதாகும். ஒரு துறவியின் வாழ்க்கை தனக்காக அல்லாமல் சமூகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய பொறுப்பை ஏற்கும் உன்னத புண்ணிய மகோற்சவத்தில் கலந்துகொள்ளக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும். பௌத்த மதத்தின் சமத்துவம், நீதி மற்றும் கருணை ஆகியவற்றை நடைமுறையில் சமூகமயமாக்குவதில் அமரபுர நிகாய ஒரு தனித்துவமான சேவையை ஆற்றுகிறது. அது சமூக நீதி மற்றும் நியாயத்தின் சின்னமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50