(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை மஹிந்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது.

இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 4 விக்கெட்களாலும் இரண்டாவது போட்டியில் இலங்கை 8 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன.
இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சம நிலையில் இருந்ததால் இன்றைய கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு அணிகளும் கடைசிப் போட்டியை எதிர்கொண்டன.
வி.கே. வினீத் குவித்த அபார சதமும் லக்ஷியா ராய்சந்தனி பெற்ற அரைச் சதமும் இந்தியா இளையோர் அணியை பலமான நிலையில் இட்டனர்.
ஆனால், சேனுஜ வேக்குனாகொட, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்கஞம் கவிஜ கமகே, கித்ம வித்தானபத்திரண, 9ஆம் இலக்க வீரர் கிம்ஹான் மெண்டிஸ் ஆகியோரின் பொறுப்புணர்வுடன் கூடிய துடுப்பாட்டங்களும் இலங்கை இளையோர் அணிக்கு அவசியமான வெற்றியையும் தொடர் வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தன.
இந்தியா இளையோர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 291 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது இலங்கை இளையோர் அணி மூன்று சந்தரப்பங்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அந்த மூன்று சந்தரப்பங்களிலும் ஏற்படுத்தப்பட்ட இணைப்பாட்டங்களே இலங்கை இளையோர் அணியை வெற்றி அடையச் செய்தன.
ஒரு கட்டத்தில் இலங்கை இளையோர் அணி 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் சேனுஜ வேக்குனாகொட, கவிஜ கமகே ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (139 - 5 விக்.)
சேனுஜ வேக்குனாகொட 10 பவுண்டறிகள். ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களையும் கவிஜ கமகே 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கித்ம வித்தானகேவும் சாமிக்க ஹீனட்டிகலவும் 6ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
கித்ம வித்தானகே (31 ஓட்டங்கள்) உட்பட மூவர் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கை இளையோர் அணி மீண்டும் அழுத்தத்தை எதிர்கொண்டதுடன் இந்தியா இளையோர் அணி வெற்றி பெற்றுவிடும் என கருதப்பட்டது.
ஆனால், சாமிக்க ஹீனட்டிகலவும் பின்வரிசை வீரர் கிம்ஹான் மெண்டிஸும் 9ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
கிம்ஹான் மெண்டிஸ் 23 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சாமிக்க ஹீனட்டிகல தொடர்ந்து பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி இலங்கை இளையோர் அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

சாமிக்க ஹீனட்டிகல 68 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அன்மோல்ஜீத் சிங் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷவின் வினோத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மோஹித் உல்வா 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்தியா இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைக் குவித்தது.
அபார சதம் குவித்த வீ.கே. வினீத், அரைச் சதம் பெற்ற லக்ஷியா ராய்சந்தனி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 108 ஓட்டங்கள் இந்தியா இளையோர் அணியைப் பலப்படுத்தியது.
வீனீத் 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களையும் லக்ஷியா ராய்சந்தனி 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஏனைய வீரர்களில் ஷவின் வினோத் (26), மொஹித் உல்வா (19),அர்ஜுன் ராஜ்புட் (14) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் செத்மிக்க செனவிரட்ன 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கிம்ஹான் மெண்டிஸ் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகர்கள்: குஷக்ரா ஓஜா (முதலாவது போட்டி), திமன்த மஹாவித்தான (இரண்டாவது போட்டி), சாமிக்க ஹீனட்டிகல (மூன்றாவது போட்டி)

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM