நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம குறிப்பு!?

09 Jul, 2026 | 06:36 PM
image

இன்றைய சூழலில் உயர்கல்வி கற்றிருந்தாலும் தொழிற்கல்வி கற்றிருந்தாலும் அனுபவம் இருந்தாலும்  நேர்காணலில் பங்கு பற்றும் போது போட்டிகளை சமாளிக்க வேண்டிய கடினமான நெருக்கடிகளை எதிர் கொள்ளாத இளைய தலைமுறையினர் இருக்க மாட்டார்கள். 

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டு ,வேலை வாய்ப்பை பெற்று விடுவதில் தீவிரம் காட்டும் இளைய தலைமுறையினருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அவர்களால் தங்களுடைய திறமைக்கும் தகுதிக்கும் உரிய பணி வாய்ப்பு கிட்டும். இந்தத் தருணத்தில் அதிர்ஷ்டம் மட்டுமே கை கொடுக்கும் சிறந்த வழிமுறையாகும். இதனை பெறுவதற்கு கிடைப்பதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல்வேறு சூட்சம குறிப்புகளை வழங்கி உள்ளனர்.

இதற்கு தேவையான பொருட்கள் : பச்சரிசி

நீங்கள் நேர்காணலில் பங்குபற்றுவதற்காக தயாராகி வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் ஏழு என்ற எண்ணிக்கையிலான முனை முறியாத பச்சரிசியை எடுத்து, அதனை உங்களுடைய வலது கை உள்ளங்கையில் வைத்து மூடி, நேர்காணலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையை மனதில் இருத்தி, ஒரு முகமாக தியானித்து.

அந்த வலது கையை உங்களுடைய உச்சம் தலையில் வைத்து மீண்டும் ஒரு முறை பிரார்த்திக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த வலது கை உள்ளங்கையில் இருக்கும் ஏழு என்ற எண்ணிக்கையிலான அரிசியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நேர்காணலில் பங்கு பற்றி தன்னம்பிக்கையுடன் பதிலளித்து விட்டு வீடு திரும்புகையில் எதிர்ப்படும் ஆலயத்தில் அல்லது ஆலய வளாகத்தில் அந்த ஏழு என்ற எண்ணிக்கையிலான அரிசியை எங்கேனும் வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வீட்டுக்கு திரும்பினால். விரைவில் உங்களுக்கான வேலை வாய்ப்பு ஆணை கிடைக்க பெறுவீர்கள்.

பச்சரிசி என்பது சந்திரனையும், உச்சந்தலை என்பது எம்முடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றிணையும்.. சுட்டுக் காட்டுவதால் அங்கு நீங்கள் செய்யும் அரிசி வழியிலான பிரார்த்தனையை இந்த பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு நல்வழி காட்டும்.

தொகுப்பு: சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31