ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

09 Jul, 2026 | 06:34 PM
image

எம்மில் சிலருக்கு அக்குள் பகுதியில் விவரிக்க இயலாத அளவிற்கு சிறிய அளவிலான கட்டிகள் ஏற்பட்டு, மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன் பாரிய அசௌகரியத்தையும் உண்டாக்கும். இத்தகைய நாட்பட்ட தோல் பாதிப்புகளை மருத்துவ மொழியில் ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா என வரையறை செய்கிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

18 வயது முதல் 40 வயது வரையிலான ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் அக்குள், இடுப்பு, பிட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான சீழ் கட்டி பாதிப்பு ஏற்படுகிறது.

வியர்வை சுரப்பியில் ஏற்படும் சமச்சீரற்ற செயல்பாட்டின் காரணமாக இத்தகைய கட்டிகள் உருவாகி கணிசமான பாதிப்பை உண்டாக்குகிறது. வலி மிகுந்த கட்டிகள், சீழ் வெளியாக கூடிய புண்கள், தோலில் மாற்றம், அரிப்பு ஆகிய அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

தொற்று பாதிப்பு ,சுற்றுச்சூழல் காரணிகள், மரபணு சார்ந்த குறைபாடுகள், எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கோளாறுகள், வாழ்க்கை முறை, உணவு முறை என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு இதற்கான சிகிச்சை பெற்ற பின்பு மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் இதன் பாதிப்பின் துல்லியத்தையும், வீரியத்தையும் வைத்தியர்கள் அவதானித்து அதற்கு ஏற்ற வகையில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி, இதற்கு நிவாரணம் வழங்குகிறார்கள்.

இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக கடைப்பிடித்தால்.. மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.

வைத்தியர் சுதா

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெனிட்டோயூரினரி டியூபர்குளோசிஸ் எனும் சிறுநீரகத்தில் ஏற்படும்...

2026-08-18 16:54:32
news-image

கேஸ் கீஸர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய...

2026-08-17 15:34:34
news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41