அறிமுக நடிகர் தமிழ்வாணன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் - இட ஒதுக்கீடு அரசியலால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேசுகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் தாஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் தமிழ்வாணன்- அபிராமி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்க, இவர்களுடன் 'சி எஸ் கே' சரவணன், 'பிக் பொஸ்' பிரவீண் , 'ஜெய் பீம்' மொசக்குட்டி, அகத்தியன், விஜயலட்சுமி, அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார்.
அரசியல் அதிகாரத்தால் அங்கீகாரத்தை பெற போராடும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக பேசும் இந்த திரைப்படத்தை டாம்'ஸ் கன்சல்டன்சி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மலை வாசஸ்தலமான ஏலகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM