பான் இந்திய நட்சத்திர நடிகரான ஆர். மாதவன் விஞ்ஞானி ஜி டி நாயுடுவாக திரையில் தோன்றும் 'ஜி டி என்' படத்தில் இடம்பெற்ற 'தி ரைஸ் ஆப் ஜி டி என் ' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜி டி என்' திரைப்படத்தில் ஆர். மாதவன்- சத்யராஜ் - ஜெயராம் -பிரியாமணி- துஷாரா விஜயன்- வினய் ராய்- தம்பி ராமையா- டீஜே அருணாச்சலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்த ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரை கலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிறுதுளி பெரும் கடலென பெருகுது..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் செந்தூழன் எழுத பின்னணி கலைஞர்கள் மாளவிகா சுந்தர் + ஜேக்ஸ் +செந்தூழன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.றாப் இசையில் ஜி டி நாயுடு வாழ்வியல் ஆளுமையை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM