நடிகர் சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா' படத்தின் படபிடிப்பு நிறைவு

09 Jul, 2026 | 06:16 PM
image

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதையின் நாயகனாக நடித்து வணிகரீதியான வெற்றி படங்களை வழங்கி திரைப்படத்துறையில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பத்து நாள் ராஜா' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ' பத்து நாள் ராஜா' திரைப்படத்தில் சதீஷ், ஆதி சாய்குமார்,  அதியா பிரசாத், ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் தயாரித்திருக்கிறார்.

சில கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என்றும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47