மஹமோதர, பழைய போகம்பரை வளாகங்கள் சிறைச்சாலைகளாக அறிவிப்பு

Published By: Digital Desk 3

09 Jul, 2026 | 05:06 PM
image

(எம்.மனோசித்ரா)

நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக அடிப்படையில் 'மஹமோதர' மற்றும் 'பழைய போகம்பரை' வளாகங்களைச் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கமைய சிறைச்சாலைகளாக நிறுவுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக, அந்த வளாகம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதுவொரு குற்றவியல் பிரதேசமாகவும் கருதப்படுகிறது. இதனால், அங்கு கைதிகளைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது எனச் சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.  

புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பாகத் தங்களது விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலோர் தற்காலிகமாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தைப் புனரமைக்கும் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளன.  

இதேவேளை, தற்போது இயங்கி வரும் சிறைச்சாலைகளின் நெரிசல் நிலைமை மற்றும் கைதிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, குறிப்பிட்டளவிலான கைதிகளைத் தற்காலிக அடிப்படையில் வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.  

இதன் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக அடிப்படையில் 'மஹமோதர' மற்றும் 'பழைய போகம்பரை' வளாகங்களைச் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கமைய சிறைச்சாலைகளாக நிறுவுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக...

2026-07-16 12:31:22
news-image

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகளை...

2026-07-16 19:51:54
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 19:09:07
news-image

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர்...

2026-07-16 19:37:44
news-image

நீதித்துறையை கட்டுப்படுத்தவோ ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை...

2026-07-16 19:09:53
news-image

எதிர்க்கட்சியில் இருக்கும்போதுதான் பீரிஸுக்கு நீதித்துறை சுதந்திரம்,...

2026-07-16 19:08:47
news-image

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென்...

2026-07-16 18:59:54
news-image

கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு :...

2026-07-16 17:42:04
news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18