(நெவில் அன்தனி)
முன்னாள் சம்பியன் பிரான்ஸுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டி பொஸ்டன் பொக்ஸ்பரோ விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியின் மறுபோட்டியாக இந்தப் போட்டி அமைகின்றது.
இந்த இரண்டு அணிகளும் கத்தாரில் அரை இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டபோது போட்டியின் ஆரம்பத்திலும் பிற்பகுதியிலும் போடப்பட்ட கோல்களின் உதவியுடன் பிரான்ஸ் 2 - 0 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.
இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவிடம் பெனல்டி முறையில் 3 (3) - 3 (4) என பிரான்ஸ் தோல்வி அடைந்து உப சம்பியனானது.

நான்கு வருடங்களின் பின்னர் இந்த வருட உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி 16 அணிகள் சுற்றுவரை இலகுவாக முன்னேறி இருந்தது.
முதல் சுற்றில் செனகல் (3-1), ஈராக் (3 - 0), நோர்வே (4 - 1) ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்ட பிரான்ஸ், 32 அணிகள் சுற்றில் சுவீடனை 3 - 0 என வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நான்கு போட்டிகளிலும் இலகுவான வெற்றிகளை ஈட்டிய பிரான்ஸுக்கு 16 அணிகள் சுற்று ஆட்டம் இலகுவாக அமையவில்லை.

16 அணிகள் சுற்றில் பரகுவேயிடம் கடும் சவாலை எதிர்கொண்ட பிரான்ஸ், போட்டியின் 70ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்பே போட்ட பெனல்டி கோலின் மூலம் இறுக்கமான (1 - 0) வெற்றியை ஈட்டி கால் இறுதிக்கு முன்னேறியது.
மறுபுறத்தில் ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுடனான தனது ஆரம்பப் போட்டியை 1 - 1 என மொரோக்கோ வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. அப் போட்டியில் பிரேஸில் வீரர்கள் கோல் போட எடுத்த 14 முயற்சிகள் பலனற்றுப் போயின.
இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்தின் சவாலை முறியடித்த மொரோக்கோ 1 - 0 என இறுக்கமான வெற்றியை ஈட்டியதுடன் கடைசிப் போட்டியில் ஹெய்டியை 4 - 2 என இலகுவாக வெற்றிகொண்டது.

தொடர்ந்து 32 அணிகள் சுற்றில் நெதர்லாந்துடனான போட்டியை 1 - 1 வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மொரோக்கோ பெனல்டிகளில் 3 - 2 என வெற்றிபெற்று 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது.
16 அணிகள் சுற்றில் வரவேற்பு நாடுகளில் ஒன்றான கனடாவை 3 - 0 என இலகுவாக மொரோக்கோ வெற்றிகொண்டது.
இந்த இரண்டு அணிகளினதும் போட்டி முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கால் இறுதிப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாடுகளும் 6 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. ஒரு உலகக் கிண்ணம், இரண்டு சிநேகபூர்வ சர்வதேச போட்டிகள், இரண்டு 2 ஆவது மன்னர் ஹசன் கால்பந்தாட்டப் போட்டிகள், ஒரு டுவனோய் டி பிரான்ஸ் போட்டி ஆகியவற்றில் விளையாடி உளளன. அவற்றில் 4 போட்டிகளில் பிரான்ஸ் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டியில் மொரோக்கோ வெற்றிபெற்றது. ஒரு போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM