ராஜஸ்தானில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக வெளியான செய்திகள், காணொளிகள் முற்றிலும் தவறானவை - பொலிஸ் அறிவிப்பு   

09 Jul, 2026 | 03:11 PM
image

ராஜஸ்தானில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் காணொளிகள் முற்றிலும் தவறானவை என ஸ்ரீ கங்காநகர் பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளார். 

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான வழக்கு தொடர்பில் பல்வேறு முரணான தகவல்கள் தற்போது கசிந்து வருவதாகவும் அவை முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இத்தகைய தவறான தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார், வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக புதன்கிழமை (8) காலை சமூக ஊடகங்களில் காணொளி பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். 

உணர்வு ரீதியில் தாக்கம் செலுத்தக்கூடிய, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக வெளியாகி வரும் காணொளிகள் குறித்து ஸ்ரீ கங்காநகர் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பான சரிபார்க்கப்படாத, போலி அல்லது தவறான வீடியோக்கள் எதையும் மற்றவர்களுக்கு அனுப்பவோ சமூக ஊடக வெளியில் பகிரவோ வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் காணொளிகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை என்பதை தெளிவுபடுத்தி ஏ.எஸ்.பி தீபக் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொலிஸ் தரப்பின் கூற்றுப்படி, ஒரு சிறுமி அழுவது போன்ற காட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவரை பொலிஸார் தாக்குவது போன்ற காட்சிகளும் கடந்த சில நாட்களாக இணையத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த காணொளிகளுக்கும் ஸ்ரீ கங்காநகர் சிறுமி வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதற்காக இந்தச் சம்பவத்துடன் அவை போலியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கின் உணர்வுபூர்வமான தன்மையைக் கருத்திற்கொண்டு, சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை இடுவோர் அல்லது அவற்றைப் பகிர்வோர் அல்லது பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவோர் மீது சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.

குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய அல்லது விசாரணையை பாதிக்கக்கூடிய, சரிபார்க்கப்படாத உள்ளடக்கங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும், காவல்துறை வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி, உள்வாங்குமாறும் மக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18