உலகப் போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களை விடவும் அமெரிக்காவுக்குள் பரவி வரும் கம்யூனிஸமே நாட்டின் இருப்புக்கு மிக ஆபத்தான அச்சுறுத்தல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நான் மட்டும் ஒருவேளை கம்யூனிஸ்டாக இருந்திருந்தால், வரலாற்றிலேயே லெனினை விட புகழ்பெற்ற ஒரு தலைவராக உருவாகியிருப்பேன். அவர்கள், வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு இலவசமாக வீடு வழங்குவோம் என்று நம்ப வைப்பார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்த அடுத்த 12 மாதங்களுக்குள் மக்கள் பாரதூரமான அளவுக்கு வறுமையில் மூழ்கித் தவிப்பார்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் என்றும் ட்ரம்ப், கம்யூனிஸ கொள்கையை விமர்சித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ட்ரம்ப், பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்து மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கம்யூனிஸசம் என்பது ஒரு பேரழிவு என்றும் அது தற்போது புதிய பெயர்களில் சமூகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ட்ரம்ப் தொடர்ந்து பேசுகையில்,
“தீவிர சோசலிஸவாதிகள், சோசிஸ ஜனநாயகவாதிகள் என்ற வார்த்தைகள் எல்லாம் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் நாட்டைச் சீரழிக்கக்கூடிய மி ஆபத்தான சக்திகள்.
அமெரிக்காவில் உள்ள லத்தீன் அமெரிக்க மக்கள், கடந்த காலங்களில் தங்களது சொந்த நாடுகளில் கம்யூனிஸத்தின் கொடுமைகளை அனுபவித்துவிட்டு வந்தவர்கள் என்பதால்தான் அவர்கள் தற்போது எனக்கு அதிகப்படியாக ஆதரவளித்து வருகின்றனர்.
முதலாளித்துவக் கொள்கை மூலம் மட்டுமே அமெரிக்காவைத் தொடர்ந்து ஒரு செல்வந்த நாடாகத் தக்கவைத்துக்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM