செ.திவாகரன்
தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்று வியாழக்கிழமை (09) மீண்டும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களது வழக்கு இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர்கள், நுவரெலியா பொலிஸாவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கமைய, சந்தேகநபர்களை ஜூன் (26) நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து மீண்டும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்து இளம் பெண் வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனும் கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM