பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்து இன மக்களினதும் பங்களிப்பு அவசியம் - ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்து

09 Jul, 2026 | 12:36 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

எமது நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமாயின், முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது மிகவும் அவசியமாகும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.

கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரோடு ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று (8) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக எமது இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்பொழுது எவ்விதமான பேதங்களும் பிரிவினைகளும் இல்லை. அத்தகையதொரு பிரிவினைவாத போக்கினை நாம் அங்கு காண்பதும் இல்லை. எனவே ஏதேனும் பிரச்சினைகள் தோன்றும் போது, அவை குறித்து சுமூகமான முறையில் கலந்துரையாடி, அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

அதற்கு ஒரு தொடர்ச்சியான கலந்துரையாடல் தேவைப்படுகின்றது. இது ஒரு சந்தர்ப்பத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தற்பொழுது நாம் அனைத்து சமயத் தலைவர்களுடனும் இத்தகைய கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றோம். 

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையாடலானது மிகவும் பயனுள்ள மற்றும் சாதகமானதொரு ஆரம்பமாகும். இந்த பேச்சுவார்த்தைகளை எமது நாட்டின் எதிர்கால நன்மைக்காக தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் உடன்பட்டுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08