வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஐஸ், ஹெரோயின், ஹஷீஷ் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (09) விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 120 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 112 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜீமாவத்தை பகுதியில் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 110 கிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் திஹாரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தம்பஹுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 50 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ், 168 கிராம் ஹஷீஷ் மற்றும் 80 கிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM