பெருந்தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாங்களே சிறந்த தீர்வு வழங்கினோம் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

09 Jul, 2026 | 12:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினைக்கு நாங்கள் தான் சிறந்த தீர்வினை வழங்கினோம். சம்பள அதிகரிப்பை தொடர்ந்து பெருமளவிலானோர் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் மீண்டும் இணைந்துள்ளார்கள். காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரே கட்டத்தில் தீர்வு காண முடியாது. இருப்பினும் தீர்வு காணலுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவங்ச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இரத்தினபுரி மாவட்டத்தில் 50 தோட்ட கிராமங்கள் உள்ளன. இந்த தோட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தோட்ட புறங்களில் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் நீர் வசதிகள், வீடமைப்பு உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச செயலகம் மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஊடாக புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம். கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஊடாக பெருமளவிலான லயன் அறைகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை ஒருங்கிணைந்த வீடமைப்புத் திட்டத்துக்கமைய கடந்த ஆண்டு பெருமளவிலான வீடுகள் புனரமைக்கப்பட்டு, பயனாளர்களுக்கு உரித்து பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினைக்கு நாங்கள் தான் சிறந்த தீர்வினை வழங்கினோம். சம்பள அதிகரிப்பை தொடர்ந்து பெருமளவிலானோர் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் மீண்டும் இணைந்துள்ளார்கள். காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரே கட்டத்தில் தீர்வு காண முடியாது. இருப்பினும் தீர்வு காணலுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34