சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேகநபர்களும் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்ரோ வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் வைத்து இந்த கஜமுத்துக்களை விற்பனை செய்யத் தயாராக இருந்த போதே இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மூன்று சந்தேகநபர்களும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 46 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தலவத்துகொட, மீதலாவ மற்றும் தொலஸ்பாகே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM