கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ; விரிவுரைகள் இணையவழிக்கு மாற்றம் 

Published By: Digital Desk 3

09 Jul, 2026 | 11:24 AM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஸ் கருணாதிலக தெரிவித்தார். 

குறிப்பாகக் கலைப்பீட மாணவர்களிடையே பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதால், மாணவர்களின் உடல்நலன் மற்றும் கல்வித் தொடர்ச்சியைக்கருத்தில் கொண்டு கலைப்பீடம் உள்ளிட்ட சில பீடங்களின் விரிவுரைகள் மட்டும் ஒரு வாரக் காலத்திற்கு இணைய வழியில் அல்லது ஹைப்ரிட் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்றும், விரிவுரைகள் மட்டுமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன என்றும் துணைவேந்தர் தெளிவுபடுத்தினார்.

ஒரே வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பீடம், கல்வியியல்பீடம் மற்றும் முகாமைத்துவப்ப்பீடம் ஆகியவற்றில் அதிகப் பாதிப்புகள் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி சூழ்நிலைக்கு ஏற்ப இணையவழி அல்லது ஹைப்ரிட் முறைக்கு மாறுவதற்கு அவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08