பளுதூக்கும் உபகரணம் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

உடற்பயிற்சி கூடத்தில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு இறந்தவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதுடைய பென் ஷாவ் எனும் இளைஞராவார்

 அந்த இளைஞர் சுமார் 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சிக்கும்போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

பின்னர் அவரது உடல் உடற்பயிற்சி கூடத்தின் ஊழியர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.