ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கிச் சென்ற சரக்கு விமானம் விபத்து ; உடைந்த பாகங்கள் மீட்பு, 5 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம் 

Published By: Digital Desk 3

09 Jul, 2026 | 09:39 AM
image

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு சரக்குகளுடன் பயணித்துக் கொண்டிருந்த K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737-400 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகின. 

பதிவு எண் AP-BOI கொண்ட இந்த போயிங் 737-400 சரக்கு விமானம், பாகிஸ்தான் நேரப்படி புதன்கிழமை இரவு 9.21 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை திடீரென இழந்தது.

விமானத்தில் தலைமை விமானி முகமது ரிஸ்வான் இத்ரீஸ் உள்ளிட்ட ஐந்து பணியாளர்கள் பயணித்திருந்தனர்.

தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓர்மாரா நகரின் தெற்கே சுமார் 53 கடல் மைல் தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் கடற்படை மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்பு முகமை ஆகியவை வான் மற்றும் கடல்வழி வளங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதுவரை விமானப் பணியாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் நிலவி வருகிறது.

இதற்கிடையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போன விமானப் பணியாளர்களை தேடும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07
news-image

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4...

2026-07-18 15:17:31
news-image

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி;...

2026-07-18 10:24:03
news-image

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ்...

2026-07-18 09:26:16
news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31