மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

09 Jul, 2026 | 09:00 AM
image

நாட்டின்  மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (09) வியாழக்கிழமை வெப்பமான வானிலை  நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம்  பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெப்பநிலை அதிகரிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:

சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக வேலை செய்வதகாலும், வெளியில் நடமாடுவதாலும் அதிக சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  

எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:  

அவசியமான நடவடிக்கைகள்:

போதியளவு தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்தி உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருங்கள்.  

கடுமையான உடலுழைப்பைக் கோரும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது தவிர்க்கவும்.  

இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.  

வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள். வாகனங்களில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08