ரணில் விக்ரமசிங்க வழக்கு: சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க செப்டம்பர் 30இல் மீண்டும் விசாரணை

Published By: Vishnu

09 Jul, 2026 | 05:38 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அரச நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு புதன்கிழமை (8) கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

 நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி சமதரி பியசேன, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக ஒரு திகதியை குறிப்பிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, ' இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்த மொத்தத் தொகையில் பாதியளவு தொகை வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், எனது சேவைப்பெறுநருக்கு அந்த வாகனங்களைப் பிரித்தானிய அரசாங்கமே வழங்கியிருந்தது.' என்றார்.

இது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றிய நடைமுறைகள் அடங்கிய ஆவணமொன்றை அரச சட்டத்தரணியிடம் ஒப்படைத்த ஜனாதிபதி சட்டத்தரணி,இது குறித்தும் ஒரு விசாரணையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். அன்றைய தினம் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிவான் அரச தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த 2023ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது, தனிப்பட்ட ஒரு பயணத்திற்காக 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச பணத்தைச் செலவிட்டதன் மூலம் அரச நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08