நாட்டில் பொது சுகாதார துறையில் சமூக சுகாதார பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை ஒட்டி இலங்கை சமூக வைத்திய நிபுணர்களின் சங்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகமும், இலங்கை சமூக வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவருமான விசேட வைத்திய நிபுணர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
1926 ஆம் ஆண்டு களுத்துறையில் இலங்கையின் முதலாவது சமூக சுகாதார பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் உருவான எமது சமூக சுகாதாரச் சேவை, இன்று 100 வருடங்களை நிறைவு செய்துள்ளது. எமது சமூக வைத்திய நிபுணர்கள் மற்றும் அடிமட்ட சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினால், உலகளாவிய ரீதியிலும் ஆசிய பிராந்தியத்திலும் இலங்கையின் சுகாதாரத் தரம் மிக உயர்ந்து காணப்படுகின்றது.
குறிப்பாக, மகப்பேற்று கால தாய் சிசு மரண வீதம் என்பன பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கலில் 99 வெற்றியைப் பெற்று உலகளவில் முன்னிலையில் உள்ளதோடு, மலேரியா, யானைக்கால் போன்ற தொற்றுநோய்களையும் எமது நாட்டிலிருந்து முழுமையாக ஒழித்துள்ளோம். சுகாதாரம் மற்றும் பொதுநலன்புரி தொடர்பான அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய கொள்கை வரைவையும் நாம் தயாரிக்கவுள்ளோம்.
இந்த 100 வருட வரலாற்றுச் சாதனைகளைக் கொண்டாடும் முகமாக, எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அங்கு 12 வெற்றிக் கதைகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு நூலும், வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், ஜூலை 21 முதல் 25 ஆம் திகதி வரை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் மாநாடும், கண்காட்சியும் நடைபெறவுள்ளன என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM