நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் முன்கூட்டியே கைதிகள் பிரிக்கப்பட்டிருந்தால் பாரிய உயிர்ச்சேதத்தைத் தடுத்திருக்கலாம்: சஞ்சீவ எதிரிமான்ன

Published By: Vishnu

09 Jul, 2026 | 05:07 AM
image

(செ.கவிஷனா)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய வன்முறை சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மாத்திரம் நம்பி காலம் கடத்தியதே பாரிய விபத்துக்கு வழிவகுத்தது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற விசேட நேர்காணல் நிகழ்வொன்றில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய வன்முறை மற்றும் கைதிகளின் மரணங்கள் தொடர்பாக முதல் நாள் மாலையிலேயே மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களையும் உடனடியாகப் பிரித்து, கண்டி – போகம்பரை போன்ற வேறு சிறைச்சாலைகளுக்குப் பேருந்துகள் மூலம் மாற்றியிருந்தால், அடுத்தடுத்து நிகழ்ந்த பாரிய உயிர்ச்சேதங்களைத் தடுத்திருக்கலாம். எனினும், சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மாத்திரம் நம்பி காலம் கடத்தியதே இந்த விபரீதத்துக்கு வழிவகுத்துள்ளது. முதல் நாள் மோதலில் இருவர் உயிரிழந்து 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்த நிலையிலும், மறுநாள் காலை சிறைச்சாலை வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தவறான கணக்குப்போட்டதுடன், அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என நீதி அமைச்சரும் முற்கூட்டியே தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் கொடூரமான வன்மமும், பகையும் எவ்வாறு திடீரென உருவாக முடியும் என கேள்வி எழுகிறது. இதில் அதிகாரிகளின் நிர்வாகக் குறைபாடும், தவறான கணிப்பும் தெளிவாகப் புலப்படுகிறது என்றார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேயவீர கருத்து தெரிவிக்கையில், சிறைக்குள் நடந்த வன்முறைகளின் போது கைதிகள், சிறைச்சாலை அத்தியட்சகரின் கழிவறை, கண்காணிப்பு கேமரா தொகுதிகள் மற்றும் உடல்களைப் பரிசோதிக்கும் நவீன ஸ்கேனர் கருவிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சொத்துக்களையும் முற்றாக அடித்து நொறுக்கிய பின்னரே, இரும்பு உறைவிடக் கதவுகளையும் உடைத்துக்கொண்டு பிரதான மரக்கதவு வரை வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பிரதானமாக நாட்டில் காணப்படும் போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் பாரிய குற்றசாட்டுகள் வழிவகுக்கின்றன.

கடந்த 6 மாதங்களில் மாத்திரம் இலங்கையில் 150 பில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 4,500 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து பாதாள உலகக் கடத்தல் வலையமைப்பை இயக்கிய 30-க்கும் மேற்பட்ட பிரதான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த வன்முறை வெடித்துள்ளது. தற்போது சிறைச்சாலை வரலாற்றில் முதன்முறையாக 7 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் விசேட விசாரணைக் குழு மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இதில் இழைக்கப்பட்ட நிர்வாகத் தவறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34