கைதிகள் மீதான தாக்குதலுக்கு நீதி அமைச்சர் மௌனம் ஏன்? – சுதேஷ் நந்திமால் சில்வா கேள்வி

Published By: Vishnu

09 Jul, 2026 | 05:00 AM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றி அனுப்பப்படும் கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து நீதி அமைச்சர் மௌனம் காப்பது, இத்தாக்குதல்களை அவர் அங்கீகரிக்கிறாரா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி அமைச்சுக்கு முன்னால் திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கை நடைபெறாத நிலையில், நீதி அமைச்சில் புதன்கிழமை (08) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைகைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிக்கையில்;

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அதிகாரிகள் சிலர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அங்கிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படும் கைதிகள் மீது அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களால் சில கைதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான நிலைமை குறித்து கலந்துரையாட வந்த நமக்கு, அமைச்சர் நேரடியாக எந்தவொரு பேச்சுவார்த்தையையும் வழங்காமல், சிறைச்சாலைகள் துறைப் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளருடனேயே கலந்துரையாடல் வழங்கப்பட்டது கவலைக்குரியதாகும்.

கைதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அதிகாரிகளே சட்டத்தைக் கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடுவது பாரிய பிரச்சினையாகும். கடந்த தினத்தில் அவிஷ்க கயான் என்ற இளைஞர் சிறைக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். அந்த இளைஞர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவரை அரசாங்கம் நேரில் ஆஜர்ப்படுத்திக் காட்ட வேண்டும். இதேபோன்று அங்குணுபெலஸ்ஸ மற்றும் பூசா சிறைச்சாலைகளிலும் கைதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளுக்குள் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி அதிகாரிகள் கொலைகளைச் செய்யும் இந்தச் சூழ்நிலை நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் பெரிய கரும்புள்ளியாகும். கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை அமைச்சர் தனது விருப்பத்தின் பேரில் அங்கீகரிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், அடுத்த முறை பெருந்திரளான மக்களைத் திரட்டி பாரியதொரு போராட்டத்தை நீதி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34
news-image

“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை :...

2026-07-17 14:10:57
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை ;...

2026-07-17 13:04:19