(செ.கவிஷனா)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்கு தற்போதைய அரசாங்கமும், அதன் நீதி அமைச்சருமே முழுப்பொறுப்புக் கூறவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (8) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சம்பவத்தில் ஆரம்பத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தபோது, அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய வேளையில், தமக்கு எதுவும் தெரியாது என்றும் தாம் சமூக வலைத்தளங்களை கூட பார்க்கவில்லை என்றும் நீதி அமைச்சர் மிகவும் அலட்சியமாகவும் ஏளனமாகவும் பதிலளித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் பல மணிநேரம் மறைந்திருந்தமை, அவரது இத்தகைய பொறுப்பற்ற தன்மையின் காரணமாகவே அடுத்த சில மணித்தியாலங்களில் மோதல் தீவிரமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்ததுடன், 25-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்தனர். அரசாங்கம் அரசியல் ரீதியாக இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறினாலும், அதனால் உயிரிழந்தவர்களின் உயிர்களைத் திரும்பப் பெற முடியாது என்பதால் வெறுமனே பொறுப்பேற்பதாகக் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை.
நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பு தற்போது முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுகாலமாக சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு நிரந்தரமான ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாமல் நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அத்துடன், சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு நெரிசல் காணப்படுவதுடன், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்குத் தேவையான உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே தற்போது பணியில் உள்ளனர்.
அமைப்பொழுங்கு மாற்றம் மற்றும் புதிய மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கங்கள் செய்த தவறுகளையே மீண்டும் செய்கிறது. இரண்டு பௌர்ணமி தினங்களுக்குள் நாட்டின் போதைப்பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதாகக் கூறிவிட்டு, தற்போது 18 பௌர்ணமி தினங்கள் கடந்த நிலையிலும் சிறைச்சாலைக்குள்ளேயே தாராளமாக புழங்கும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM