மனித உரிமையான விவசாயம், அடிப்படை உரிமையாக்கப்படும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Published By: Vishnu

09 Jul, 2026 | 12:10 AM
image

(எம்.மனோசித்ரா)

விவசாயத்தை ஒரு மனித உரிமையாகக் கருதி, அதனை நாட்டின் அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (8) விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

தற்போது அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டுமே விவசாயிகளை முக்கியமானவர்களாகக் கருதுகின்றனர். விவசாயியை ராஜாவாக்குவோம் எனக் கூறி வாக்குகளைப் பெற்றுவிட்டு, இறுதியில் அவர்களைக் கைவிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வயல்களில் இறங்கி உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் எனக் கூறும் அமைச்சர்கள், அதன் பின்னர் விவசாயிகளை நட்டத்திலேயே விடுகின்றனர்.

தற்போது ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 137 ரூபாவாக இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் உத்தரவாத விலை 120 ரூபாவாக மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் தொடர்ந்தும் நட்டமடைந்து வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். விவசாய உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாரிய நெருக்கடி காணப்படுகிறது.

விதைகள், உரம், எரிபொருள், விவசாய இரசாயனங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் யானை-மனித மோதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும், விவசாயிகள் தங்களின் சொத்துக்களை அடகு வைத்தே விவசாயம் செய்கின்றனர். ஆனால் இதில் அரசாங்கத்தின் தலையீடு மிகவும் குறைவாகவே உள்ளது. விவசாயத்தை வலுப்படுத்த மலிவு விலையில் தரமான உரம் மற்றும் விதைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், உற்பத்திச் சங்கிலியில் அரச தலையீடு அவசியமாகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08