டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Published By: Vishnu

08 Jul, 2026 | 11:20 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில்  தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவதோடு  நோயாளர்களின் எண்ணிக்கையும்  வெகுவாக அதிகரித்துள்ளதோடு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 42 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 63  ஆயிரத்து 835 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் சுமார் 21,543 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு இம்மாதம் கடந்த 7 நாட்களில் மாத்திரம் 8451  நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய  டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது.  டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 142  சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு டெங்கு காய்ச்சலால்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 42 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு சதவீதமும் 0.07 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.  இதேவேளை  மேல் மாகாணத்தில் 52.59 சதவீத  டெங்கு நோயாளர்களும், தென்மாகாணத்தில் 15.77 சதவீத நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர  முடியும். ஆகையால் இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயல்பட வேண்டும்.  சுற்றுப்புற சூழல் பாதுகாப்பும் அதன் தூய்மையும் எமது கரங்களிலேயே உள்ளது. அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமையும் எம்மை சார்ந்தே உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.

வீட்டு சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலேயே  நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன. ஆகையால் வாராந்தம் இருமுறை வீடு உட்பட சுற்றுப்புற சூழலை 15 நிமிடங்கள் தூய்மை படுத்துவதன் மூலம் டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08