(நெவில் அன்தனி)
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ, துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் புதன்கிழமை வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 130 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ முதல் 20 வீரர்களுக்குள் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 22ஆவது இடத்திலிருந்த அசித்த பெர்னாண்டோ இப்போது 20 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முன்னர் 20ஆவது இடத்திலிருந்த அசித்த பெர்னாண்டோவின் சக அணி வீரர் சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 84 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 44 ஓட்டங்களையும் பெற்ற கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்ட வரிசையில் 8ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஒட்டங்களைப் பெற்ற தினேஷ் சந்திமால் தொடர்ந்தும் 10ஆம் இடத்தில் இருக்கிறார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM