(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக குருமூர்த்தி பழனி உட்பட மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் எடின்பேர்கில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை மாநாட்டின்போது நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் குருமூர்த்தி பழனி (பிரான்ஸ்), முபாஷ்ஷிர் உஸ்மானி (ஐக்கிய அரபு இராச்சியம்), டாக்டர் ரூடி வென் வூரென் (நமிபியா) ஆகிய மூவரே இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது பதவிக் காலம் இரண்டு வருடங்களைக் கொண்டதாகும்.
இந்தத் தேர்தலில் சமகால பணிப்பாளர்களான முபாஷ்ஷிர் உஸ்மானி, இம்ரான் கவாஜா, மஹிந்த வல்லிபுரம் ஆகியோருடன் குருமூர்த்தி பழனி, ரூடி வென் வூரென் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 43 இணை உறுப்பு நாடுகள் தகுதி பெற்றிருந்தன. அமெரிக்க கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் கனடா ஆகியவை ஐசிசி உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவை பங்கேற்கத் தகுதி பெறவில்லை.
குருமூர்த்தி பழனிக்கு 35 வாக்குகளும் முபாஷ்ஷிர் உஸ்மானி, ரூடி வென் வூரென் ஆகியோருக்கு தலா 26 வாக்குகளும் கிடைத்தன. உஸ்மான் கவாஜா 25 வாக்குகளுடன் நான்காம் இடத்தைப் பெற்றார்.
இதேவேளை ஐசிசி நிறைவேற்றுச் சபையிலும் குருமூர்த்தி பழனி பதவி வகிப்பதால் அவருக்கு இரண்டு பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்க முடியாது. இதன் காரணமாக நிறைவேற்றுச் சபையில் அவரது பதவி குறித்து வாக்களிப்பு மூலம் தீர்மானிக்கப்படும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM