(எம்.மனோசித்ரா)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய பல சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைகளுக்கும் ஏனைய சித்திரவதை வடிவங்களிலான மோசமான நடத்தைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணைக்குழு தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.
மேலும், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த கைதி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும், ஜூலை 7ஆம் திகதி இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உடனடி மறுமொழிப் பிரிவினருக்கு (Rapid Response Unit) அனுமதி மறுக்கப்பட்டமை குறித்தும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM