(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக நொட்டிங்ஹாம், ட்ரென்ட் ப்றிஜ் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 3ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 125 ஓட்டங்களால் இந்தியா மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.4 ஓவர்களில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
பீல் சோல்ட் 44 பந்துகளில் 70 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்துக்கு கணிசமான ஓட்டங்களைப் பெற உதவிய அதேவேளை, இங்கிலாந்தின் புதிய வேகப்பந்து ஜோடியினரான ஜொவ்ரா ஆச்சர், ஜொஷ் டங் ஆகிய இருவரும் தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை சரணடையச் செய்தனர்.

இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் 5 பிடிகளை எடுத்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நடப்பு ரி20 உலக சம்பியனான இந்தியா, மிகத் பெரிய தோல்வியைத் தழுவயதுடன் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்தது.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியான 16 தொடர் வெற்றிகளுடன் பதினொரு தினங்களுக்கு முன்னர் அயர்லாந்தில் கால்பதித்த இந்திய அணியினர் அங்கு விளையாடிய இரண்டு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தனர்.
இதன் மூலம் சகல வகையான கிரிக்கெட்டிலும் அயர்லாந்திடம் முதல் தடவையாக இந்தியா தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0 - 2 என பறிகொடுத்தது.
இப்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தது.
இங்கிலாந்துடனான தொடரை பறிகொடுக்காமல் இருப்பதற்கு இந்தியா அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
முதலாவது போட்டியில் அறிமுகமானதன் மூலம் மிக இளவயதில் சரவ்தேச கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த வைபவ் சூரியவன்ஷி (15 வருடங்கள், 99 நாட்கள்), இரண்டாவது போட்டியில் தனது ஸ்ரைக் ரேட்டை 260.00 ஆகக் கொண்டிருந்தார். அதுவே அப் போட்டியில் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட அதிகூடிய ஸ்ட்ரைக் ரேட் ஆகும். எனினும் அவரால் 13 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
சூரியவன்ஷி தனது அறிமுகப் போட்டியில் 14 ஓட்டங்களை 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் பெற்றார்.
இரண்டாவது போட்டி
இரண்டாவது போட்டியிலும் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஷ்ரயேஸ் ஐயர், இம்முறை களத்தடுப்பை தெரிவுசெய்தார். அவரது அந்த முடிவு பாதகத்தையே ஏற்படுத்தியது.
அப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

பில் சோல்ட் 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் சாம் கரண் 24 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ப்றின்ஸ் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ராணா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் வைபவ் சூரியவன்ஷி (13), இஷான் கிஷான் (13), அபிஷேக் ஷர்மா (10), அக்சார் பட்டேல் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் டங் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஜொவ்ரா ஆச்சர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM