நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்; சிகிச்சை பெறும் அதிகாரிகள், கைதிகளை காண அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம்  

Published By: Digital Desk 3

08 Jul, 2026 | 04:51 PM
image

(செ.சுபதர்ஷனி)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில்  காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு  மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள், சிறைகைதிகளை நேற்று  (7 ) செவ்வாய்க்கிழமை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் சென்று நலன் விசாரித்திருந்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (5) மற்றும் திங்கட்கிழமையன்று (6) இடம்பெற்ற கடும் மோதலில் காயமடைந்த சிறை  அதிகாரிகளும், சிறைக் கைதிகளும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் 72,79 ஆகிய வார்ட்டுகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் பிற்பகல் அளவில் அமைச்சர் வைத்தியசாலைக்கு  விஜயம் செய்து, சிகிச்சைப் பெற்று வருபவர்களின் நலன் மற்றும் சிகிச்சை சேவைகள், அவசரத் தேவைகள் மற்றும் பிற சேவைகள் வழங்குவது  தொடர்பிலும்  வைத்தியர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் கேட்டரிந்துக் கொண்டார்.  அதற்கமைய தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 அதிகாரிகள், 14 கைதிகள் உள்ளடங்களாக 29 பேர் சிகிச்சைப்பெற்றுவருவதோடு, அவர்களில் 12  பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும்  தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08