(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
தோட்ட மக்களுக்கு 10பேர்ச் காணியுடன் வீடு வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம், தற்போது அந்த மக்கள் வாழ்ந்துவரும் வீடுகளில் இருந்து வெளியேற்றுமாறு தோட்ட கம்பனி கடிதம் அனுப்பி இருக்கும் நிலையில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. ஜனாதிபதி இதற்கு இடமளிக்கக்கூடாது. இல்லாவிட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்ட தோட்ட மக்களை அந்த வீடுகளில் இருந்து வெளியேறுமாறு தோட்ட கம்பனி ஒன்றினால் கடிதம் அனுப்பி இருக்கிறது.
குறித்த கடிதத்தில், தோட்டங்களில் பணி செய்வதற்கே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் பல்வேறு வீட்டுத்திட்டங்களின் அடிப்படையில் தோட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
என்றாலும் தற்போது தோட்டங்களில் தொழில் செய்வதில் இருந்து விலக, வேறு இடங்களில் பணி செய்வது வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
அதனால் பணி விலகியவர்கள் உடனடியாக தோட்டங்களில் மீண்டும் பணியில் இணைந்துகொள்ள வேண்டும். அல்லது 7 நாட்களுக்குள் வீடுகளை விட்டு செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தோட்டங்களில் வேலை செய்தவர்கள் தற்போது ஓய்வு பெற்றிருப்பார்கள். அவர்களின் பிள்ளைகள் அந்த வீடுகளில் இருப்பது தவறா என கேட்கிறோம். அவர்களுக்கு வீடே இல்லையா? கம்பனி காரர்களின் இந்த நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதி அமைச்சர் சுந்தரலிங்கத்தை சந்தித்தி இதுதொடர்பில் நான் தெரிவித்தேன். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இன்று தேயிலை தோட்டங்களில் டீ சென்டர் என பல ஏக்கர்கள் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி செய்ய நிலம் ஒதுக்கி வருகிறது. ஆனால் பல வருடகாலங்களாக தோட்டங்களில் வேலை செய்துவந்த மக்களுக்கு 4,5 பேச்சஸ் காணியில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை விட்டு செல்லுமாறு தெரிவிக்கின்றனர்.இது நியாயமா என கேட்கிறோம்.
தோட்ட மக்களுக்கு 10பேர்ச் காணியுடன் வீடு வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம், தற்போது அந்த மக்கள் வாழ்ந்துவரும் வீடுகளில் இருந்து வெளியேற்றும்வரை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறதா? ஜனாதிபதி இதற்கு இடமளிக்கக்கூடாது.
அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய பிரச்சினை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. களனிவெலி பிளான்டேஷன் கம்பனி மாத்திரமே இவ்வாறு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதனால் தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் குறித்த கம்பனியின் கடிதத்தை ரத்துச்செய்ய வேண்டும்.
அதேநேரம் அரசாங்கம் நுவரேலியா விவசாயிகளுக்கு தொடர்ந்தும் மோசடி செய்துவருகிறது. விவசாயிகள் அனைவரையும் சமமாக பார்க்குமாறே கேட்டுக்கொள்கிறோம். அந்த மக்களும் உங்களுக்கு வாக்களித்தவர்கள்.
உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த கரிசனையும் இல்லை. இறக்குமதி செய்து விநியோகிக்கும் கொள்கையே அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அவ்வாறு செய்வதற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை. இந்த வேலையை புறக்கோட்டையில் இருக்கும் முதலாளியும் செய்வார். அதனால் அரசாங்கம் ஒரு கொள்கை இல்லாமலே செயற்பட்டு வருகிறது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM