மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் கலந்துரையாடல் 

Published By: Digital Desk 3

08 Jul, 2026 | 04:10 PM
image

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் கலந்துரையாடல் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் அலுவலகத்தில் இன்று (08) புதன்கிழமை இந்த விசேட சினேகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மலையகப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் பாராட்டுக்களை தெரிவித்தார்.

மலையகத்தின் நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பிரதி அமைச்சர் அவர்கள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை எனவும், மக்கள் மத்தியில் அதன் சாதகமான தாக்கங்கள் தென்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களின் முன்னேற்றமே தமது முதன்மையான இலக்கு எனவும், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

மலையகத்தின் நிலையான அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய இந்த சந்திப்பு, மலையக அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முக்கியமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08