நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முழங்கால் மூட்டு வலி என்பது அவர்களின் நாளாந்த வாழ்க்கை நடைமுறையை கடுமையாக பாதிக்கிறது. இத்தகைய மூட்டு வலி- முழங்கால் மூட்டு தேய்மானத்தினால் உருவாகிறது. இதற்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் முழுமையான தீர்வு என்றாலும்... இதற்கு தற்போது ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் நவீன சத்திர சிகிச்சை அற்ற ஊசி துளை சிகிச்சை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூட்டு வலி பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகளில் முழுமையான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு வைத்தியர்கள் ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் நவீன சத்திர சிகிச்சை அற்ற ஒரு சிகிச்சை முறையை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
முதுமையின் காரணமாக எம்முடைய முழங்கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டுகளில் வலி, வீக்கம் போன்ற பாதிப்பை உண்டாக்குகிறது. இதனை மருத்துவ மொழியில் ஓஸ்டியோஓர்தரைட்டிஸ் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பின் காரணமாக உட்காருவதிலும்... நிற்பதிலும்... நடப்பதிலும்... குனிவதிலும்... மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவதிலும் ... கடுமையான அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
இத்தகைய பாதிப்பிற்கு நடைமுறையில் பல சிகிச்சைகள் இருந்தாலும் அவற்றினால் பக்க விளைவு ஏற்படுவதால்... நோயாளிகள் சில சிகிச்சைகளை தவிர்த்து விடுகிறார்கள். இந்த தருணத்தில் ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் நவீன சிகிச்சை முறை அறிமுகமாகி இவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது.
இத்தகைய சிகிச்சையின் போது முழங்கால் மூட்டுகளில் உருவாகி இருக்கும் புதிய ரத்த நாளங்களுக்கு செல்லும் குருதி ஓட்டத்தை தடை செய்து, அங்கு ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறார்கள். இது பக்க விளைவை ஏற்படுத்தாததால்... இத்தகைய நவீன சிகிச்சை முறைக்கு நோயாளிகளிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்தகைய நவீன சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளுக்கு மூட்டு வலி குறைந்து தங்களது நாளாந்த வாழ்க்கையை உற்சாகத்துடன் மேற்கொள்ள தொடங்குகிறார்கள்.
வைத்தியர் ராஜ் கண்ணா தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM