அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

08 Jul, 2026 | 02:58 PM
image

இன்றைய சூழலில் உயர்கல்வி கற்றவர்களுக்கு அரசாங்க பணி என்பது குதிரை கொம்பாக இருந்தாலும்... அதற்காக கடின முயற்சி மேற்கொண்டாலும், இறைவனின் ஆசியும் பரிபூரணமாக கிடைத்திட வேண்டும்.

திறமை- கடின உழைப்பு - இறைவனின் ஆசி- இந்த மூன்று விடயங்கள் ஒரு புள்ளியில் இணையும் தருணத்தில் தான் உங்களுக்கான அரசாங்க பணி கிடைப்பதற்கான சாத்தியம் உண்டு என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் இறைவனின் ஆசியை பெறுவதற்கான பிரத்யேக வழிமுறையையும் அவர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : மூன்று அகல் விளக்கு, நெய் அல்லது நல்லெண்ணெய், அரச இலை.

திங்கட்கிழமை , சதுர்த்தி, அமாவாசை பௌர்ணமி மற்றும் நீங்கள் பிறந்த கிழமை ஆகிய நாளில் அருகில் இருக்கும் அரச மரம் +வேம்பு மரம் +விநாயகர்+ நாகலிங்க வடிவம் + ஆகியவை ஒன்றிணைந்து இருக்கும் மரத்தடி விநாயகரை தெரிவு செய்து, மூன்று அரச இலைகளை பறித்து, அதன் மீது மூன்று அகல் விளக்குகளை வைத்து, அதில் நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். அந்த தருணத்தில் அரச மர விநாயகரை 33, 54 ,108 என்ற எண்ணிக்கையில் உங்களுடைய உடல்  ஆரோக்கியத்தை பொறுத்து வலம் இருந்து இடமாக சுற்றிவர வேண்டும். அந்த தருணத்தில் பின்வரும் மந்திரத்தை பதினோரு முறை உச்சரிக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய சமர்பிரபா!

நிர்விக்னம் குருமேதேவோ ஸர்வ காரயேசு ஸர்வதா!

இந்த மந்திரத்தை உச்சரித்து அரச மரத்தை வலம் வந்து மரத்தடி விநாயகர் வணங்கி, உங்களது கோரிக்கையை சமர்ப்பித்தால்... நீங்கள் அரசாங்க ஊழியராக தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை பெற்று நியமனம் செய்யப்படுவீர்கள். அரசாங்க ஊழியர்களாக இருந்தால்... நீங்கள் விரும்பிய பதவி உயர்வும், இட மாற்றமும் கிடைக்கும். நீங்கள் திருமணத்தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தால்... அந்தக் கோரிக்கையும் நிறைவேறும். இப்படி எந்த எண்ணத்தை சமர்ப்பணம் செய்கிறீர்களோ..! அவை உடனடியாக நிறைவேறும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31