பான் இந்திய நட்சத்திர நடிகரான யஷ் கதையின் நாயகனாக அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும் 'டாக்ஸிக் ' திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் 'தபாஹி ' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகையும், இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'தபாஹி' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையில் உருவான இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் எழுத பின்னணி பாடகர் விஷால் மிஸ்ரா பாடியிருக்கிறார். நாயகனும், நாயகியும் கண்டவுடன் காதலும்... கட்டற்ற காமமும்.. இணைந்து கொண்டாட்ட பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல்- இளம் காதலர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. இந்த பாடலுக்கான காணொளியில் யஷ்- கியாரா அத்வானி ஆகியோரின் 'ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி' ரசிகர்களை மெய் மறந்து ரசிக்க செய்திருக்கிறது.
'சரி- தவறு குறித்த எண்ணங்களுக்கு அப்பால் ஒரு பரந்த வெளி உள்ளது அங்கே நான் உன்னை சந்திப்பேன்' என்ற மேற்கோளுடன் தொடங்கும் இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM