நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : சிகிச்சை பலனின்றி மற்றுமொரு அதிகாரி உயிரிழப்பு 

Published By: P. Saranya

08 Jul, 2026 | 02:58 PM
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்  இடம்பெற்ற கொடூர மோதல் சம்பவத்தின் போது படுகாயமடைந்திருந்த மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரி இன்று (08) புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த பாரதூரமான வன்முறைகள், அதற்கான பின்னணி மற்றும் இச்சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து மிக விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் தற்பொழுது விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்த மூவர் அடங்கிய குழு, சிறைச்சாலையின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53