இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச நட்சத்திர வீரருமான சௌரவ் கங்குலியின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் 'தாதா :தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
பொலிவுட் இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானி இயக்கத்தில் உருவாகி வரும் 'தாதா :தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' திரைப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் சௌரவ் கங்குலியாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் குல்சன் குமார் - பூஷன் குமார் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர். இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அன்று உலகம் முழுவதும் பான் இந்திய திரைப்படமாக படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சௌரவ் கங்குலி- விளையாட்டு வீரர் மட்டுமல்ல.. இந்திய துடுப்பாட்டத்தின் போக்கை மாற்றி அமைத்த தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்ட வீரர் என்பதும்... அவருடைய பிறந்த நாளான இன்று அவருடைய வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
ஃபர்ஸ்ட் லுக்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியின் போது சௌரவ் கங்குலி தன்னுடைய விளையாட்டு சீருடையை கழற்றி வெற்றியின் உற்சாகத்தை கொண்டாடிய தருணமாக இடம் பிடித்திருப்பது... இப்ப படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இதனிடையே இந்திய துடுப்பாட்ட ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் - மகேந்திர சிங் டோனி- முகமது அசாருதீன்- ஆகியோருக்குப் பிறகு சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM