(நெவில் அன்தனி)
வான்கூவர் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற சுவிட்ஸர்லாந்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்று ஆட்டத்தில் 4 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டிய சுவிட்ஸர்லாந்து, 72 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இதற்கு அமைய கன்சாஸ் சிட்டி விளையாட்டரங்கில் 12ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கடைசி கால் இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீனாவை சுவிட்ஸர்லாந்து எதிர்த்தாடவுள்ளது.
சுவிட்ஸர்லாந்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போட்டி மேலதிக நேர முடிவில் கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பார்ட்டன் சிஸ்நேரொஸ் பெனல்டி முறையை அமுல்படுத்தினார்.

வழங்கப்பட்ட தலா 5 பெனல்டிகளில் நான்கை சுவிட்ஸர்லாந்து கோலினுள் புகுத்தியதுடன் கொலம்பியாவினால் மூன்றை மாத்திரமே கோலினுள் புகுத்த முடிந்தது.
மேலதிக நேரம் உட்பட 120 நிமிடங்களைக் கொண்ட இந்தப் போட்டி சுவிட்ஸர்லாந்து கோல் காப்பாளர் க்றெகோர் கோபெல், கொலம்பியா கோல்காப்பாளர் கெமிலே வர்காஸ் ஆகியோருக்கு இடையிலான போட்டியாகவே அமைந்தது.

அவர்கள் இருவரும் ஏகப்பட்ட கோல் முயற்சிகளை தங்களது கடும் முயற்சியானால் தடுத்து நிறுத்தினர். அவர்கள் இருவரும் மின்னல் வேகத்தல் அங்கும் இங்கும் தாவி கொல்களைத் தடுத்தபோது அரங்கிலிருந்து பெருந்திரளான ரசிகர்கள் கரகோஷம் செய்து உற்சாகமூட்டினர்.
பெனல்டிகளின்போது கொலம்பியா சார்பாக குச்சோ ஹேர்னாண்டெஸ் உதைத்த நான்காவது பெனல்டியை சுவிட்ஸர்லாந்து கோல்காப்பாளர் க்றெகோர் கோபெல் தடுத்து நிறுத்தியதுடன் தீர்மானம் மிக்க 5ஆவது பெனல்டியை சுவிட்ஸர்லர்நது வீரர் ரூபன் வர்காஸ் கொலினுள் புகுத்தி தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM