கபில சந்திரசேனவின் மரணம்: அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு இரசாயன பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைப்பு

08 Jul, 2026 | 12:25 PM
image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி  கபில சந்திரசேன மரணமடைந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (08) புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின்  அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை விளக்குகையில், கபில சந்திரசேன உயிரிழந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில அடையாளம் தெரியாத மருந்துகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர்.

அத்துடன், மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் பசன் அமரசேன, குறித்த மருந்துகள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பணிமனைக்கும் மற்றுமொரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக, வழக்கினை எதிர்வரும்  22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08