இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

08 Jul, 2026 | 02:42 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் அன்டிகுவா நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (07) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் இந்தத் தொடரை 1 - 0 என தனதாக்கிக்கொண்டது.

இதன் மூலம் 23 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் ஈட்டிக்கொண்டது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2023இலிருந்து 11 முயற்சிகளின் பின்னரே இந்தத் தொடர் வெற்றி கிடைத்துள்ளது. கடைசியாக ஸிம்பாப்வேக்கு எதிராக 2023இல் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1 - 0 என வெற்றிபெற்றிருந்தது.

மேலும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக (2 - 0) கைப்பற்றிய பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

இந்த போட்டியின் கடைசி நாளான நேற்றைய தினம் இலங்கை நிர்ணயித்த 302 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி இலக்கை அடைய குறைந்தபட்சம் 61 ஓவர்கள் இருந்தபோதிலும் ஜோன் கெம்பெல், ப்றெண்டன் கிங் ஆகிய இருவரும் இலங்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடவில்லை.

போட்டி முடிவில் அவர்கள் இருவரும் தலா 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக நேற்றுக் காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இலங்கை 9 விக்கெட் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நிறுத்திக்கொண்டது.

மூத்த வீரர் தினேஷ் சந்திமால் (71), கமிந்து மெண்டிஸ் (44), தனஞ்சய டி சில்வா (34) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். 

மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் குறைந்த பட்சம்  61 ஓவர்களில் 302 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 40 ஓவர்களை எதிர்கொண்ட நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: 549 - 9 விக். டிக்ளயார்ட் (லஹிரு உதார 188, சொனால் தினூஷ 92, கமிந்து மெண்டிஸ் 84, குசல் மெண்டிஸ் 69, தனஞ்சய டி சில்வா 33, ஜேடன் சீல்ஸ் 98 - 2 விக்., ஷமர் ஜோசப் 98 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 499 (ஜஸ்டின் க்றீவ்ஸ் 180, ஷாய் ஹோப் 112, ஜோன் கெம்பெல் 72, கவென் ஹொஜ் 31, அசித்த பெர்னாண்டோ 130 - 5 விக்., ப்ரபாத் ஜயசூரிய 131 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 251 - 9 விக். டிக்ளயார்ட் (தினேஷ் சந்திமால் 71, கமிந்து மெண்டிஸ் 44, தனஞ்சய டி சில்வா 34, அல்ஸாரி ஜோசப் 44 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன் : (வெற்றி இலக்கு 302 ஓட்டங்கள், ஆட்டம்  முடிவுக்கு வந்தபோது) விக்கெட் இழப்பின்றி 109 (ஜோன் கெம்பெல் 51 ஆ.இ., ப்றெண்டன் கிங் 51 ஆ.இ.)

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் ஜஸ்டின் க்றீவ்ஸ் வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56