(நெவில் அன்தனி)
23ஆவது பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றை நடத்தும் வரவேற்பு நாடுகளில் ஒன்றான கனடாவில் நடைபெறவுள்ள கடைசிப் போட்டியில் சுவிட்ஸர்லாந்தும் கொலம்பியாவும் மோதவுள்ளன.
பீபா உலகக் கிண்ணத்தில் கடைசி 16 அணிகள் சுற்று ஆட்டமாகவும் அமையும் இந்தப் போட்டி வான்கூவர் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பி குழுவில் இடம்பெற்ற சுவிட்ஸர்லாந்து முதல் சுற்றில் கத்தாருடனான முதலாவது போட்டியை 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது.

ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா (4 - 1 ), கனடா (2 - 1) ஆகிய அணிகளை வெற்றிகொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
32 அணிகள் சுற்றில் அல்ஜீரியாவை 2 - 0 என வெற்றிகொண்டு 16 அணிகள் சுற்றில் விளையாட சுவிட்ஸர்லாந்து தகுதிபெற்றது.
கே குழுவுக்கான முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் (3 - 1), கொங்கோ (1 - 0) ஆகிய அணிகளை கொலம்பியா வெற்றிகொண்டது. ஆனால் போர்த்துக்கல்லுடனான போட்டியை கொலம்பியா வெற்றிதோல்வியின்றி (0 - 0) முடித்துக்கொள்ள நேரிட்டது.
தொடர்ந்து 32 அணிகள் சுறறில் கானாவை சந்தித்த கொலம்பியா 1 - 0 என வெற்றி பெற்று 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது.
சுவிட்ஸர்லாந்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான போட்டி பெரும்பாலும் ஓர் இறுக்கமான போட்டியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளினதும் பெறுபேறுகள் கிட்டத்தட்ட ஒரே விதமாக இருப்பதால் எந்த அணி வெற்றிபெற்று கால் இறுதிக்கு செல்லும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது.
உலக தரவரிசையிலும் இரண்டு அணிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொலம்பியா 11ஆவது இடத்திலும் சுவிட்ஸர்லாந்து 15ஆவது இடத்திலும் இருக்கின்றன.
எனவே இந்தப் போட்டி ஆரம்பத்திலிருந்து கடைசிவரை விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM