தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'டிசி 'திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹேங்கோவா..' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்- வாமிகா கபி -சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி- ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஜி. முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 31-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஹேங்கோவா ..'எனும் பாடலும் , பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் ஹைசன்பர்க் எழுத, பின்னணி பாடகரும் ,இசையமைப்பாளருமான அனிருத் பாடியிருக்கிறார். ஆங்கில பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல்- தமிழ் திரையிசை ரசிகர்களுக்கு புதிய இசை அனுபவத்தை வழங்கி இருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM