'பிக் பொஸ்' மூலம் புகழ்பெற்ற நடிகர் ராஜூ ஜெயமோகன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஆல்மோஸ்ட் நல்லவன்' என பெயரிடப்பட்டு , அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் உருவாகும் 'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படத்தின் ராஜு ஜெயமோகன், சத்யராஜ், துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, பிக் பொஸ்' தாமரை செல்வி, யாழினி, ப்ரீதம் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கோவிந்த் மேற்கொள்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் அஸ்ஃபயர் உபுண்டு ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் ஆர். ஜே. பாலாஜி, ஆதிக் ரவிச்சந்திரன், ரோஹின் வெங்கடேசன், நடிகர்கள் விது, ரங்கராஜ் பாண்டே, தயாரிப்பாளர்கள் கார்த்திக், லலித் குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி இயக்குநராக அறிமுகமாகும் ராஜூ ஜெயமோகன் பேசுகையில், '' ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும் உள்ளன. அவர்களுடன் சில குறைகளும் உள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் பலரும் சொந்த வாழ்க்கை மற்றும் சமூக ஊடக வாழ்க்கை என இரட்டை முகத்துடன் வாழ்கிறார்கள். இதில் ஏற்படும் சிக்கல்களை சுவராசியமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைந்து விவரிப்பது தான் இப்படத்தின் கதை'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM