இன்றைய சூழலில் எம்மில் சிலருக்கு விபத்து ஏற்பட்ட பிறகோ அல்லது சில தருணங்களில் முன்னோக்கி குனியும் போதோ.. மூக்கில் இருந்து பிரத்யேக திரவம் வெளியேறுவதை பார்த்திருப்போம். இதை மருத்துவ மொழியில் செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பு என குறிப்பிடப்பட்டு, இதற்கு சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எம்முடைய மூளை பகுதியில் பாதுகாப்பு திரவமாக இருப்பது செரிப்ரோஸ்பைனல் திரவம். அதே தருணத்தில் நாசி பகுதியில் இருந்து எம்முடைய மூளையை பிரிப்பதற்கு எலும்பு மற்றும் திசுக்களின் தடை அமைப்பு இயற்கையாகவே உள்ளது. இந்தப் பகுதியில் ஏதேனும் சில காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டால்... மூளையில் உள்ள செரிப்ரோஸ்பைனல் திரவம் கசிய தொடங்கி.. அது மூக்கின் வழியாக வெளியேறுகிறது. இது அவசரமாக சிகிச்சை பெற வேண்டிய நிலையாகும்.
தலைவலி, முன்னோக்கி குனியும் போது மூக்கில் இருந்து வாசனையற்ற தெளிவான நீர் துளி துளியாக வெளியேறுவது ஆகிய அறிகுறிகள் ஆகும் . இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்... அவர்களுக்கு செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்ஸ இதற்கு பிரத்யேகமாக சிடி ஸ்கேன் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பின் தன்மை துல்லியமாக அவதானிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பை அலட்சியப்படுத்தினால்... மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு, உயிரிழப்பு உண்டாகும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
வைத்தியர் சாந்தனு தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM