இன்றைய சூழலில் எம்மில் பலரும் மனிதர்களை கடந்த இயற்கை ஆற்றல் அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்ற ஒன்று உள்ளது என நம்பிக்கை கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். அத்துடன் ஆன்மீக ரீதியாக இறை உருவங்களை நம்பிக்கையுடன் வழிபடும் போது தங்களுக்கு சாதகமான சில பலன்கள் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். மேலும் தங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வினை வழங்கும் படி மக்கள் வராகி அம்மனை வழிபட தொடங்குவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல சூட்சமமான குறிப்புகளை வழங்கியுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : தேங்காய், நெய், நல்லெண்ணெய், செம்பருத்தி பூ , செவ்வரளி பூ.
உங்களுடைய விலை மதிக்க முடியாத பொருட்கள் பயணத்தின் போது தொலைந்து போய்விட்டால்.. அது தொடர்பாக வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி திதி அன்று செம்பருத்தி பூவை மாலையாக சாற்றி வழிபட்டு... தொலைந்து போன பொருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
மூன்று முறை நீங்கள் பிரார்த்தனை மேற்கொள்ளும் தருணத்தில் அவை மீண்டும் கிடைப்பதற்கான குறிப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் அது தொடர்பான தீர்மானமான முடிவை நீங்கள் மேற்கொள்வதற்கான உளவியல் ஆற்றலும் கிடைக்கும். செம்பருத்தி பூவை மாலையாக சாற்றுவதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் செவ்வரளி மலர்களையும் பாவிக்கலாம்.
வேறு சிலர் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கும் போது தேங்காயை உடைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி தீபமேற்றி வாராகி அம்மனை அவரது சன்னதியில் வணங்குவர். இத்தகைய தேங்காய் தீப வழிபாட்டை தொடர்ந்து ஐந்து தேய்பிறை பஞ்சமி திதிகளில் மேற்கொண்டால்.. உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
உக்கிர தெய்வங்களில் வாராஹி அம்மனுக்கு தனித்துவமான சிறப்பியல்புகள் உண்டு. இந்த அம்மனை தேய்பிறை பஞ்சமி திதி என்று வணங்கி பிரார்த்தித்துக் கொண்டால்.. உங்களது வேண்டுகோள் ஈடேறும்.
தொகுப்பு: சுபயோக தாசன்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM